சென்னை திருமங்கலத்தில் கார் மோதியதில் பைக்கில் சென்ற மாணவர் பலி
Advertisement
சென்னை: சென்னை திருமங்கலத்தில் கார் மோதியதில் பைக்கில் அமர்ந்து சென்ற மாணவர் உயிரிழந்தார். ஒட்டிய மாணவர் படுகாயம் அடைந்துள்ளார். பைக்கில் அமர்ந்திருந்த மாணவன் நித்தின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். ஒட்டிய அபிஷேக் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி மாணவன் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அயனாவரத்தைச் சேர்ந்த அபிஷேக் (20), நித்தின் சாய்(19) பைக்கில் சென்றபோது கார் மோதியது. முன்விரோதம் காரணமாக மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் காரை ஏற்றி கொலை செய்ததாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
Advertisement