சிக்னல் கோளாறு காரணமாக செங்கல்பட்டில் ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காலதாமதம்
Advertisement
செங்கல்பட்டு: சிக்னல் கோளாறு காரணமாக செங்கல்பட்டில் ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காலதாமதமாக சென்றது. ஒட்டிவாக்கம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் ரயில்கள் கால தாமதம். விழுப்புரம் பாசஞ்சர், பாண்டிச்சேரி விரைவு ரயில், செங்கோட்டை விரைவு ரயில், சேது விரைவு ரயில் உள்ளிட்டவை நீண்ட நேரம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
Advertisement