தூத்துக்குடியில் 3,000 ஏக்கரில் கப்பல் கட்டும் தளம் அமைக்க ஒன்றிய அரசு திட்டம்
டெல்லி: தூத்துக்குடியில் 3,000 ஏக்கரில் கப்பல் கட்டும் தளம் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடியை முக்கிய கப்பல் கட்டும் தளமாக உருவாக்க ஒன்றிய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைத்ததை அடுத்து துறைமுகம் மேம்படுத்த ஒரு மெகா திட்டமிட்டுள்ளது. 5 மாநிலங்களில் 15,000 ஏக்கரில் ரூ.1.50 லட்சம் கோடி மதிப்பீட்டில் கப்பல் கட்டுமான தொகுப்புகள் செயல்பட உள்ளன. ஆந்திரா, ஒடிசா, குஜராத், மராட்டியம் வரிசையில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி துறைமுகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கப்பல் கட்டும் தளத்துக்காக துறைமுகம் அருகே 1,800 ஏக்கர் இடம் தேர்வு; விரைவில் கூடுதலாக 1,200 ஏக்கர் இணைக்கபப்ட்டுள்ளது.