ரஷ்யாவுடன் இந்தியா என்ன வர்த்தகம் செய்கிறது என்பதை பற்றி கவலை இல்லை: டிரம்ப் விமர்சனம்
வாஷிங்டன்: ரஷ்யாவுடன் இந்தியா என்ன வர்த்தகம் செய்கிறது என்பதை பற்றி கவலை இல்லைஎன அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். இந்தியாவும் ரஷ்யாவும் தங்களது வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை சரிவில் கொண்டு செல்லட்டும். இந்தியாவுடன் அமெரிக்கா மிக குறைவான வர்த்தகமே செய்கிறது. இந்தியாவின் வரி விதிப்பு மிக அதிகமாக இருக்கிறது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து காட்டமான பதிவு செய்து வருகிறார். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளதாகவும் விமர்சித்தார்.