ஓய்வுபெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மாநிலங்களவையில் பாராட்டு..!!
Advertisement
டெல்லி: ஓய்வுபெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெறும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு வழியனுப்பும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதில், கூட்டாட்சி, மொழி உரிமை, சமூகநீதி உள்ளிட்டவற்றுக்கு வைகோ குரல் கொடுத்தார் என துணைத்தலைவர் புகழாரம் சூட்டினார். மேலும், ஓய்வுபெறும் எம்.பி.க்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக மாநிலங்களவை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார். திருச்சி சிவா, வைகோ, முகமது அப்துல்லா உள்ளிட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் இன்று ஓய்வு பெறுகின்றனர்.
Advertisement