ரெட் அலர்ட் எச்சரிக்கை நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி: ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் நாளை (05.08.2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். அதி கனமழைக்கான எச்சரிக்கையை அடுத்து நாளை ஒருநாள் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படும். மழை, பேரிடர் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 1077 என்ற கட்டணமில்லாத தொலைபேசி, 0423- 2450034, 2450035 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். 94887 00588 என்ற வாட்ஸ் அப் எண்ணில் மழை பாதிப்புகளை தெரியப்படுத்தலாம்