ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்ற பெயர்கள் நாட்டின் வரலாறுகள்: ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் பிரதமர் பேச்சு
Advertisement
'ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்ற பெயர்கள் நாட்டின் வரலாறுகள்.சோழர் கால ஆட்சி பாரத்தின் பொற்காலங்களில் ஒன்றாக இருந்தது' என கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். மேலும் 'ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் என்ற பெயர்கள் நாட்டின் வரலாறுகள். சோழர் கால கலை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. சோழர்கள் குறித்த கண்காட்சியை கண்டு பிரமித்துப் போனேன். பிரிட்டனுக்கு முன்பாகவே ஜனநாயக ரீதியில் குடவோலை முறை ஆட்சி செய்தவர்கள் சோழர்கள். சோழர்களே ஜனநாயகத்தின் முன்னோடிகள். சோழர்களின் ஆட்சியே ஜனநாயகத்தின் தாய்' எனவும் அவர் பேசினார்.
Advertisement