ராஜபாளையத்தில் கல்லூரி மாணவியை ஏமாற்றி 26 சவரன் நகைகளை பெற்ற இளைஞர் கைது
விருதுநகர்: ராஜபாளையத்தில் கல்லூரி மாணவியை ஏமாற்றி 26 சவரன் நகைகளை பெற்ற லிவின் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறிய நிலையில் திருமணம் செய்வதாக கூறியுள்ளார். திருமணம் செய்தால் வீடு வாடகைக்கு எடுக்க பணம் தேவைப்படுவதால் வீட்டில் உள்ள நகைகளை எடுத்துவா என கேட்டுள்ளார். மாணவி 26 சவரன் நகை, ரூ.50,000 கொடுத்த நிலையில் சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு லிவின் சென்றார்.