கண்ணூர் சிறையில் இருந்து தப்பிய கைதி பிடிபட்டார்
Advertisement
கண்ணூர்: கேரளா மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி பிடிபட்டார். விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி, 2011 இல் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். ஓடும் ரயிலில் நடந்த இந்த சம்பவத்தில் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இன்று சிறையில் கைதிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போது கோவிந்தசாமி தப்பியது தெரியவந்தது. மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர். இந்நிலையில் சிறையில் இருந்து தப்பிய ஆயுள் தண்டனை கைதி கோவிந்தசாமி 2 கி.மீ. தூரத்திலேயே பொதுமக்களிடம் பிடிபட்டார். ஆயுள் தண்டனை கைதி கோவிந்தசாமி அதிகாலை சிறை கம்பிகளை உடைத்து தப்பிய நிலையில் பிடிபட்டார்
Advertisement