புதுச்சேரியில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1000 உதவித் தொகை : முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!!
11:52 AM Jul 28, 2025 IST
Share
புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமிஅறிவித்துள்ளார். தற்போது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தலைவிகளுக்கு மட்டும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுச்சேரி தவளைகுப்பத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.