திட்டமிட்டபடி பாமக சிறப்பு பொதுக்குழு நாளை நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு
12:45 PM Aug 16, 2025 IST
திண்டிவனம்: திட்டமிட்டபடி பாமக சிறப்பு பொதுக்குழு நாளை நடைபெறும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். புதுச்சேரி அருகே உள்ள சங்கமித்ரா அரங்கில் நாளை திட்டமிட்டபடி சிறப்பு பொதுக்குழு நடைபெறும். பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாக சில விஷமிகள் வதந்தி பரப்புகின்றனர். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.