திருச்சூர்: பழம்பெரும் பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன்(80) உடல்நலக் குறைவால் காலமானார். திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாடகர் ஜெயச்சந்திரன் உயிர் பிரிந்தது. மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 16,000க்கும் மேற்பட்ட பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியுள்ளார். இசையமமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்களைப் பாடியுள்ளார்.