நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பிரிவு மாநாட்டில் ராகுல் காந்தி பேசியதாவது; 1.5 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். தேர்தலில் 15 இடங்கள் குறைவாக பெற்றிருந்தால் மோடி பிரதமராகி இருக்க முடியாது. தேர்தல் ஆணையம் மரித்துப் போய்விட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.