ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை 150 தொகுதிகளில் இலக்கை எட்டிய இன்பச் செய்தி கிடைத்தது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
Advertisement
சென்னை: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை 150 தொகுதிகளில் இலக்கை எட்டிய இன்பச் செய்தி கிடைத்தது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்பச் செய்தியை மண்டல பொறுப்பாளர்கள் கூற ஓரணியில் தமிழ்நாடு பற்றிய ஆலோசனை வழங்கி உற்சாகம் பெற்றேன். திமுக தொண்டர்கள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை. உயிராக நம்மை இயக்கும் திமுக களச்செயல்பாடுகள் பற்றி மண்டல பொறுப்பாளர்களுடன் ஆலோசித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement