மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறப்பு
Advertisement
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தற்போது 75,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் ஒரு லட்சம் கன அடியாக அதிகரிக்கப்படுகிறது. டெல்டா பாசனத்துக்கு 18,000 கன அடியும், 16 மதகு கண் வழியாக 82,000 கன அடியும் நீர் வெளியேற்றப்பட உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் நீர்வளத்துறை சார்பாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
Advertisement