சென்னை: தமிழ்நாட்டில் 2025-26ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புக்கான கல்விக் கட்டணம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்பிபிஎஸ் கல்விக் கட்டணம் ரூ.1.50 லட்சம் அதிகரிப்பு. மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் ரூ.13.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்ந்துள்ளது. 21 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4.34 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்விக் கட்டணம் ரூ.27 லட்சமாக உயர்ந்துள்ளது.