திருநெல்வேலி: மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 3 மற்றும் 4ஆவது ரீச் பகுதியில் உள்ள பாசன நிலங்களுக்காக 80 அடி கால்வாயில் நீர் திறக்கப்பட்டது. 118 அடி முழு கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் தற்போது 100 அடியை எட்டியது.