மதுரை: மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு புகாரில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். வரிவிதிப்பு குழுத் தலைவரான விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். வரிவிதிப்பு முறைகேடு வழக்கில் ஏற்கெனவே 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.