கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள லட்சியம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் மகேந்திரன் (48) இவர் லாரி டிரைவர். இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர் அதிகாலை தலை நசுங்கி இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி எஸ்பி மாதவன் மற்றும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி தங்கவேல், சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. முதல் கட்டமாக இறந்து போன மகேந்திரன் மூன்றாவது மகளுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட மாப்பிள்ளையை போலீசார் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.