மும்பை: 4 பெரிய நிறுவன பங்கு விலை அடிப்படையிலான சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.1.03.502.48 கோடி அதிகரித்துள்ளது. எச்.டி.எஃப்.சி. வங்கியின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.37.162 கோடி அதிகரித்து ரூ.15.38.079 கோடியாக அதிகரித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.35,814.41 கோடி அதிகரித்து ரூ.10.53.823 கோடியாக உயர்ந்துள்ளது. பார்த்தி ஏர்டெல் நிறுவன சந்தை மதிப்பு ரூ.20,841 கோடி அதிகரித்து ரூ.11.04.840 கோடியாக உயர்ந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் சந்தை மதிப்பு ரூ.9685 கோடி அதிகரித்து ரூ.7.44.449 கோடியாக உயர்ந்துள்ளது.