கர்நாடகாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
08:52 AM Aug 05, 2025 IST
ஓசூர்: கர்நாடகாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலை 6 மணி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குறைந்த எண்ணிக்கையிலேயே கர்நாடக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால் தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது.