"இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம்" சார்பாக, உலக விண்வெளி வார விழா; பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பார்வை
Advertisement
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இந்திய அரசு விண்வெளித்துறையின் கீழ் இயங்கி வரும் "இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம்" சார்பாக, 09-10-2025 முதல் 11-10-2025 வரை உலக விண்வெளி வார விழாவை (World Space Week) முன்னிட்டு பெரம்பலூர், தலைட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் வைத்து விண்வெளி கண்காட்சி இன்று துவங்கி 3நாட்கள் நடக்கிறது. இதில் பெரம்பலூர், திருச்சி, அரியலூர், கடலூர், மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பார்வையிடுகின்றனர்.
Advertisement