இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதித்தார் டிரம்ப்
வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு டிரம்ப் 25% வரி விதித்தார். வரி விதிப்பு தொடர்பாக இந்தியா - அமெரிக்கா தரப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் அதிபர் டிரம்ப் 25% வரி விதித்தார். இந்திய பொருட்களுக்கான 25% வரி விதிப்பு ஆக.1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் ராணுவ தளவாடங்கள், கச்சா எண்ணெய் வாங்குகிறது. ரஷ்யாவிடம் அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கு அபராதமாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா இனி 25% வரி விதிக்கும்.