11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
Advertisement
சென்னை: 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சுன்சோங்கம் ஐஏஎஸ் போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச் செயலராக இடமாற்றம். பிரசாந்த் வடநேரே நிதித்துறை(செலவினம்) அரசு செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராஜகோபால் சுன்கரா நிதித்துறை அரசு இணை செயலராகவும், தீபக் ஜேக்கப் நில அளவை இயக்குனராகவும், கவிதா ராமு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் மேலாண்மை இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டார்.
Advertisement