சென்னை : திருவேற்காட்டில் கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி விஜயகுமாரி கைது செய்யப்பட்டார். பட்டப் பகலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆண் நண்பர் சுரேஷுடன் பழகுவதை கணவர் கண்டித்ததால் கூலிப்படை ஏவி கொலை செய்தது அம்பலம் ஆகி உள்ளது.