சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு நாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலை மற்றும் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலை. அவர் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.