காசா: காசாவில் கடந்த 3 நாட்களாக ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 21 குழந்தைகள் இறந்திருப்பதாக ஐ.நா அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் தீவிர நடவடிக்கையால் காசாவில் உணவு பற்றாக்குறை மற்றும் மனித அத்துமீறல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது, மக்களிடம் பணம் இருந்தாலும் அதை கொண்டு எதுவும் வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.