ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் (81) உடல்நலக் குறைவால் காலமானார்..!!
டெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் (81) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். உடல் நலப் பாதிப்புக்காக டெல்லி மருத்துவமனையில் சிபி சோரன் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவராக சிபு சோரன் 38 ஆண்டுகள் பதவி வகித்தார். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக 2009 - 2010ஆம் ஆண்டு வரை சிபு சோரன் பதவி வகித்தார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராக சிபி சோரன் பதவி வகித்தார்.