ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!
02:41 PM Aug 04, 2025 IST
சென்னை: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவின் பழங்குடியினத்தவரின் நம்பிக்கையை பெற்ற மிகப்பெரிய தலைவர் சிபு சோரன். சுரண்டலுக்கு எதிரான சிபு சோரனின் போராட்டம், சமூகநீதிக்கான அர்ப்பணிப்பு நினைவுகூரப்படும் என தெரிவித்தார்.