உதகையில் கடும் பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் தவிப்பு
Advertisement
உதகை: உதகையில் கடும் பனிமூட்டத்தால் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு மெதுவாக வாகனங்களை இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சேரிங்கிராஸ், ஆட்சியர் அலுவலக சாலை, பிங்கர்போஸ்ட், பேருந்து நிலையம், படகு இல்ல பகுதிகளில் பனிமூட்டம் காணப்படுகிறது. கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement