நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளபதிவு
Advertisement
சென்னை: நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, இன்று புகழ்பெற்ற உயர்கல்விநிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ - மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினேன். மிகவும் பின்தங்கிய - துன்பங்களை அனுபவித்த குடும்பங்களில் இருந்து மேலெழுந்து புகழ்பெற்றிருக்கும் அவர்களது கல்விப் பயணத்தையும் - கல்வி மீதான அவர்களது பற்றையும் கேட்டு உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கினேன். இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement