ஆண்டியாபுரம்: ஆண்டியாபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். தலைமறைவாக உள்ள தொழிற்சாலை உரிமையாளர் சீனிவாசனை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். தொழிற்சாலையின் மேற்பார்வையாளர் செல்வகுமார், மேலாளர் பிரபாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆண்டியாபுரத்தில் வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.