விவசாயிகள் நலனை பாதுகாக்க நான் அதிக விலை கொடுக்க தயார்: பிரதமர் மோடி
டெல்லி: இந்தியாவை பொறுத்தவரை, இந்திய விவசாயிகளின் நலனுக்கே முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள், பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. விவசாயிகள் நலனை பாதுகாக்க நான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும், அதற்கு தயாராக இருக்கிறேன் என பிதமர் மோடி கூறியுள்ளார். அமெரிக்க பால் மற்றும் வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதியளிப்பதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.