நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வயநாடு செல்லும் மலைப்பாதை சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 20 அடி நீளத்திற்கு தடுப்போடு சாலையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு அமைத்துள்ளனர். வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.