கல்லூரி ஆசிரியர் பணி நியமனத்தில் ஓபிசி , எஸ்.சி.க்கு பாரபட்சம் செய்தது அமபலம்
Advertisement
டெல்லி: நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதில் பாரபட்சம் அம்பலமானது. ஆதி திராவிடர் பிரிவினருக்கான 2,310 ஆசிரியர் பணியிடங்களில் 1,599 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 423 பேராசிரியர் பணியிடங்களில் 84 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்கள் வாரியாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
Advertisement