திருவள்ளூர் : திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளியின் பெயர் வெளியானது. திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியின் பெயர் ராஜு பிஸ்வகர்மா (35). அசாம் மாநிலம் தின்சுகியாவைச் சேர்ந்தவர் என்று காவல்துறை தகவல் அளித்துள்ளது. குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறியுள்ளார்.