சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மகளிர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.430 கோடியில் நிவாரண திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவால் தாய், தந்தையரை இழந்த 382 குழந்தைகள் பெயரில் தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ. 19.1 கோடி வங்கியில் வைப்பீடு செய்துள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது நிறைவுசெய்யும்போது ரூ.5 லட்சம் வட்டியுடன் வழங்கப்படும். தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பாதுகாப்புடன் வளர்வதாக சமூகநலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.