சிதம்பரம் அருகே திருநங்கை கொலை
10:08 AM Jul 25, 2025 IST
கடலூர்: கடலூர் அருகே உள்ள கொடுக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் காவியா என்கிற கவியரசன் (40). காவியா நேற்று சிதம்பரம் அருகே பு.முட்லூர் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே கொலை செய்யப்பட்டுள்ளார். கடையின் பின்புறம் உள்ள சவுக்கு தோப்பில் காவியாவின் உடல் கண்டடுக்கப்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்