சத்தீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தப்பட்ட சம்பவத்துக்கு முதலமைச்சர் கண்டனம்
07:39 PM Jul 28, 2025 IST
Share
சென்னை: சத்தீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தப்பட்ட சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். "சிறுபான்மையினர் அஞ்சாமல், கண்ணியத்துடனும் சம உரிமையுடனும் வாழ வேண்டும். கன்னியாஸ்திரிகள் மீதான தாக்குதல் சத்தீஸ்கர் அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது. கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தப்பட்ட சம்பவம் மிகவும் கவலை அளிக்கிறது" என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.