சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: கோவையில் அமைதி பேரணி
கோவை: சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் அமைதி பேரணி நடைபெற்று வருகிறது. கோவையில் அமைதி பேரணியில் பங்கேற்ற பின், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் ஜோ அருண் அளித்த பேட்டியில்; சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிப்பது ஜனநாயகத்துக்கு பேராபத்து. வந்தனா ஃபிரான்சிஸ், பிரீத்தி மேரி இருவரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். பீகாரில் சிறுபான்மை மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.