சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு
10:37 AM Aug 01, 2025 IST
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுடன் வைகோ மற்றும் துறை வைகோ சந்தித்துள்ளார். அண்மையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய முதலமைச்சரை சந்தித்து வைகோ நலம் விசாரித்தார். திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பாஜக கூறியிருந்தது. பாஜக கூறிய கட்சி மதிமுக என சமூக ஊடகங்களில் தகவல் பரவிய நிலையில் முதல்வருடன் சந்தித்துள்ளார்.