சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் சிபிஎஸ்சி மண்டல அலுவலர் மர்ம மரணம்!!
சென்னை: சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் சிபிஎஸ்சி மண்டல அலுவலர் சடலமாக கிடந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகேஷ் டி. தர்மாதிகாரி மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் தரையில் சடலமாக கிடந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து ஜூலை 7ல் சென்னைக்கு மாற்றலாகி வந்த நிலையில் மகேஷ் டி.தர்மாதிகாரி மரணமடைந்துள்ளார். பணி முடிந்து நேற்று மாலை அண்ணா நகரில் உள்ள தனது வீட்டுக்கு மகேஷ் டி.தர்மாதிகாரி சென்றுள்ளார்.