தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்கக் கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை
10:19 AM Jul 30, 2025 IST
டெல்லி: தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதி ரூ.2,291 கோடியை ஒன்றிய அரசு வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்கக் கோரிய வழக்கில் நாளை மறுநாள் விசாரணை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி வினோத் சந்திரன் அமர்வில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.