முன்னாள் பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு
சென்னை: முன்னாள் பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு மோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பாஜக முன்னாள் நிர்வாகி சாமுண்டீஸ்வரி மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரத்தில் பெயர் மாற்றி போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த வழக்கில் சாமுண்டீஸ்வரி கைதானார். ஜாமீனில் வெளியே வந்த சாமுண்டீஸ்வரி ஆட்களை வைத்து ஆறுமுகம் என்பவரை கட்டையால் தாக்கியுள்ளார். ஜாமீனில் வெளியே வந்த சாமுண்டீஸ்வரி மீது 4 பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டையால் தாக்கியதில் படுகாயமடைந்த ஆறுமுகம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள சாமுண்டீஸ்வரியை வண்ணாரப்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.