கஞ்சா கும்பலை தட்டிக்கேட்ட அண்ணன், தம்பி கொலை
02:55 PM Aug 01, 2025 IST
தூத்துக்குடி: தூத்துக்குடி கஞ்சா போதையில் தகராறு செய்த கும்பலை தட்டிக் கேட்ட அண்ணன், தம்பி கொலை செய்யப்பட்டனர். அண்ணன் மாரிபாண்டி, மாற்றுத்திறனாளி தம்பி அருள்ராஜ் ஆகியோரை கும்பல் அடித்துக் கொன்றது. இருவரை அடித்துக் கொன்று பண்டுகரை பகுதியில் குழி தோண்டி புதைத்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. புதைக்கப்பட்ட இருவரின் உடலை தோண்டி எடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.