நாளை முதல் கோவை குற்றாலத்தில் குளிக்க அனுமதி
03:03 PM Jul 30, 2025 IST
கோவை: கோவை குற்றாலம் அருவியில் நாளை (ஜூலை 31) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியது. குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. வெள்ளப் பெருக்கு சீரானதை அடுத்து நாளை (ஜூலை 31) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.