திருவள்ளூர்: ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கில் ராஜு பிஸ்வகர்மாவுக்கு ஆகஸ்ட் 8 வரை சிறையில் வைக்க உத்தரவிட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த ராஜு பிஸ்வகர்மா காவல் முடிந்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ராஜு பிஸ்வகர்மாவை 4 நாட்கள் காவலில் எடுத்த போலீசார் 3 நாட்களில் விசாரணை முடித்து ஆஜர்படுத்தினர்.