சென்னை ஆழ்வார்பேட்டையில் மழைநீர் வடிகால் பணி காரணமாக நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
12:23 PM Aug 10, 2025 IST
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் மழைநீர் வடிகால் பணி காரணமாக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள், நான்குசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி. மியூசிக் அகடாமி, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை நோக்கி வரும் மாநகரப் பேருந்துகளின் வழித்தடங்களில் மாற்றம் செய்துள்ளனர்.