அஜித் மரண வழக்கு: நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
02:51 PM Jul 24, 2025 IST
சிவகங்கை: திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மடப்புரம் கோயிலில் தனது நகையை திருடியதாக அஜித்குமார் மீது நிகிதா புகார் அளித்திருந்தார். நிகிதாவின் புகாரை அடுத்து அஜித்குமாரை சிறப்பு தனிப்படை போலீஸ் அழைத்துச் சென்றனர். சிறப்பு தனிப்படை போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்த நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது.