மும்பை : சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கரப்பான் பூச்சி இருந்தது. கரப்பான் பூச்சி இருப்பதாக கூறிய இரு பயணிகள் வேறு இருக்கைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். தூய்மைப் பணி நடந்தாலும் சில நேரம் பூச்சிகள் விமானத்தில் வந்து விடுகின்றன என்றும் பயணிகளுக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்பதாகவும் ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டது.